மும்பை அணியை யாரால் வெல்ல முடியும்? சுனில் கவாஸ்கர் சவால்!

Last Updated: செவ்வாய், 30 மார்ச் 2021 (17:43 IST)
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று இமாலய பலத்துடன் இருக்கும் அணியாக உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மும்பை இண்டியன்ஸ் அணி உள்ளது. அந்த அணியின் இந்திய வீரர்கள் பெரும்பாலும் இப்போது இந்திய அணியில் உள்ளனர். இந்நிலையில் விரைவில் ஐபிஎல் 2021 தொடங்க உள்ள நிலையில் அந்த அணியை எந்த அணியும் வெல்வது கடினம் என்றும் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்கள் பார்முக்கு திரும்பியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இருக்கும் பார்மில் இப்போது அந்த அணியை வெல்வது சாத்தியம் இல்லாதது. மும்பை ஹாட்ரிக் சாம்பியனாகும் ’என அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :