அதிக தொகைக்கு ஏலம் எடுத்தால் பந்து அதிகமாக ஸ்விங்க் ஆகாது – பாட் கம்மின்ஸ் ஆதங்கம்!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் சென்ற சீசனில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு விளையாடவில்லை.
ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பாட் கம்மின்ஸ். ஆனால் துபாயில் நடந்த கடந்த சீசனில் அவர் 14 போட்டிகளில் 12 விக்கெட்கள்தான் எடுத்தார். ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது விமர்சனம் எழுந்துள்ளது.
இதுபற்றி பேசியுள்ள பாட் கம்மின்ஸ் நீங்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டால் பந்து அதிகமாக ஸ்விங் ஆகப்பொவதில்லை. அல்லது கிரீஸ் பந்துவீச்சாளருக்கு சாதகமாகப் போவதில்லை. மேலும் பவுண்டரிகளின் எல்லைகளும் அதிகமாகப் போவதில்லை. நீங்கள் சிறப்பாக விளையாடினால் அதை அப்படியே தொடரவேண்டும். ஆனால் மோசமாக விளையாடினால் உங்கள் விலையைப் பற்றி பேச்சு எழுந்துவிடும். அணியின் பந்துவீச்சாளர் என்னை நம்புகிறார். அது என் அதிர்ஷ்டம்தான் எனக் கூறியுள்ளார்.