ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (18:04 IST)

டி-20 கிரிக்கெட் போட்டி ; இந்திய அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் இன்று நடந்து வருகிறது. இதில். இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரும் அக்டோபர்  17 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய அணிக்கு  எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்திய அணி இந்த இலக்கை எட்டுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.