திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. சிபிஎல் 2020
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (22:23 IST)

டி-20 உலகக்கோப்பை- இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் இவர்கள்தான்

டி-20 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்கார்களால இறங்குபவர்களைப் பற்றிய தகவல் வெளியாகிறது.
 
உலகக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முக்கியமான அணிகள் ஆடும் சூப்பர் 12 குரூப் 1 மற்றும் 2 க்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டு அரையிறுதி போட்டிகள் நவம்பர் 10 மற்றும் 11லும், இறுதிபோட்டி நவம்பர் 14ம் தேதியும் நடைபெற உள்ளது.
 
இந்த போட்டிகளில் சூப்பர்12 குரூப் 2ல் அக்டோபர் 24ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. 
 
இந்நிலையிம் வரும் டி-20 உலகக் கோப்பை 2021 போட்டிகலில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் களமிறங்குவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 3 வது வீரராக கோலி களமிறங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.