திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 அக்டோபர் 2021 (17:55 IST)

டி20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணியில் புதிதாக இடம்பெற்ற வீரர்கள் யார் யார்?

டி20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணியில் புதிதாக இடம்பெற்ற வீரர்கள் யார் யார்?
உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது என்பதும் இந்த போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என ஏற்கனவே கூறப்பட்ட இந்த நிலையில் தற்போது அந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது இந்திய அணியின் புதிய பட்டியல் இதோ
 
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி
 
ரிசர்வ் வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர், அக்ஷர் படேல்
 
இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு உதவும் வீரர்களாக இருக்கும் வீரர்கள்
 
அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே. கௌதம்