புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (07:10 IST)

4வது முறை சாம்பியன் ஆனது சிஎஸ்கே: ரசிகர்கள் வாழ்த்து!

4வது முறை சாம்பியன் ஆனது சிஎஸ்கே: ரசிகர்கள் வாழ்த்து!
தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஏற்கனவே 3 முறை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் நேற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றது
 
ஏற்கனவே 9 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 192 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 193 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது 
ஆட்டநாயகனாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் தொடர் நாயகனாக அக்ஷர் பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது