செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:45 IST)

யார்கூட யாரை கம்பேர் பண்ணி பேசுறீங்க..! – தோனி பற்றி பேசியதால் கம்பீர் காட்டம்!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் தோனியுடன், மோர்கனை ஒப்பிடுவது சரி கிடையாது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிர்ல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றது. இரு அணிகளும் நல்ல ஃபார்மில் உள்ளன என்றாலும் கொல்கத்தா அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு வந்தால் ஜெயிக்காமல் சென்றதில்லை என்ற கூற்றும் உள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியையும், நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயான் மோர்கனையும் ஒப்பிட்டு யார் சிறந்தவர் என்பதுபோல சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஒப்புமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ள கௌதம் கம்பீர் “சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல்லில் மட்டும் விளையாடுவதால் தோனி ஃபார்மில் இல்லை என்கிறார்கள். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் மோர்கன் ஐபிஎல்லில் சரியாக விளையாடவில்லையே. தோனியுடன், மோர்கனை கம்பேர் செய்வது ஆப்பிளுடன் ஆரஞ்சை கம்பேர் செய்வது போல” என தெரிவித்துள்ளார்.