தொடர்புடைய செய்திகள்
- 9 நகரங்களில் உலக கோப்பை டி20! – பிசிசிஐ தீவிரம்!
- மாஸ்க் போடாமல் வந்ததுடன் போலீஸை கேவலமாக பேசிய தம்பதி! – அபராதம் விதித்து நடவடிக்கை!
- முகக்கவசம் அணியாவிட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம்: எந்த மாநிலத்தில்?
- பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் நடராஜன் இடம் பெறாததற்கு இதுதான் காரணம்!
- கொரோனாவில் இருந்து வீரர்களை பாதுகாக்க அது ஒன்றுதான் வழி… ராஜீவ் சுக்லா திட்டவட்டம்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் – பிசிசிஐ உத்தரவு!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய நிலையில் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விருவிருப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களம் இறங்கிய டெல்லி அணி 19வது ஓவரிலேயே 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச கால தாமதம் செய்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்