கொரோனாவில் இருந்து வீரர்களை பாதுகாக்க அது ஒன்றுதான் வழி… ராஜீவ் சுக்லா திட்டவட்டம்!

Last Updated: திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:26 IST)

ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் வீரர்களைக் கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பு மருந்துதான் ஒரே வழி என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021 சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்நிலையில் சில வீரர்களுக்கும் அணி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடக்கூடாது என பிசிசிஐ அணி நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா ‘நாளுக்கு நாள் அதிகமாகும் பாதிப்புகளைப் பார்த்தால் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே வழியென்று இப்போது தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :