பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இன்று ஐபிஎல்—2021 14 வது சீசன் திருவிழா தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சேலஞசர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்புடன் உள்ளனர். இந்நிலையில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, ராயல் சேலன்சர்ஸ் அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்நிலையில், பெங்களூர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடியில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூர் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.