வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (16:00 IST)

கோப்பை வெல்ல முடியாமல் ....கேப்டனாக இருப்பது ஏன்...? விராட் கோலி மீது காம்பீர் பாய்ச்சல்

நடப்பு ஐபிஎல் தொடரில் முதலில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்று வலம் வந்த கோலி தலைமையிலான  பெங்களூர் அணி அடுத்த 5 ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.  தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்  விராட் கோலியை கடுமையான விமர்சித்துள்ளார். 
 
நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி 131 ரன்களுக்கு பெங்களூர் அணியைக் கட்டுப்படுத்தினர். இந்நிலையில் போட்டியின் முக்கியமானக் கட்டத்தில் கேன் வில்லியம்ஸன் தூக்கி அடித்த பந்து சிக்ஸை நோக்கி பறந்தது. அப்போது அங்கு பீல்டிங்கில் இருந்த படிக்கல் அந்த பாலை பிடித்தார். ஆனால் அவர் எல்லைக்குள் சென்றுவிடக் கூடும் என்ற பதற்றத்தில் பாலை தூக்கி எறிந்தார்.
 
இதனால் பந்து சிக்ஸ் ஆகாமல் ஒரு ரன் மட்டும் ஆனது. ஆனாலும் அந்த கேட்ச்சை அவர் பிடித்திருந்தால் போட்டியின் முடிவு மாறி இருந்திருக்கலாம். அதன் பின்னர் நிலைத்து நின்று விளையாடிய கேன் வில்லியம்ஸன் அரைசதம் அடித்து வெற்றி பெறவைத்தார்.ஐதராபாத் அணி குவாலிபையர் 2க்கு முன்னேறியது.
இந்நிலையில், பெங்களூர் அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்,  தனது அணிக்கான ஒரு கோப்பை வெல்லாமல் தொடர்ந்து 8 வருடங்களாக கேப்டனாக இருந்து வருவது என்பது அதிகம்தான். கேப்டன் தான் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.