1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Shikar dhawan says rohith is not in batting touch

ரோஹித் இப்போது பேட்டிங்கில் டச் இல்லை… அதை நாங்கள் பயன்படுத்துவோம் – ஷிகார் தவான் கருத்து!

ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இப்போது பேட்டிங்கில் டச்சில் இல்லை எனக் கூறியுள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிகார் தவான்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. இந்நிலையில் திடீரென ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார்.

இந்நிலையில் இன்று நடக்கும் குவாலிபையர் போட்டியில் டெல்லிக்கு எதிராக மும்பை மோதவுள்ள நிலையில் ஷிகார் தவான் ரோஹித்தின் பேட்டிங் பற்றி பேசியுள்ளார். அதில் ‘ கடந்த இரண்டு வாரங்களாக ரோஹித் விளையாடாததால் அவர் பேட்டிங் டச்சில் இல்லை. அதை நாங்கள் கண்டிப்பாக பயன்ப்டுத்திக் கொள்வோம்.’ எனக் கூறியுள்ளார்.