செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (15:48 IST)

தோனியை இப்படியா நடத்துவது? கொதித்தெழுந்த அப்ரிடி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை பெற்று வருவதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் வந்ததை அடுத்து தோனி வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜார்கண்ட் அரசு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட் பதிவு செய்த குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தோனிக்கு விடுக்கப்படும் மிரட்டல் குறித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ‘தோனிக்கு என்ன மிரட்டல் வந்தது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டை உச்சத்துக்கு அழைத்துச் சென்றவர். அவரை இப்படி எல்லாம் நடத்தக் கூடாது. ’ எனக் கூறியதாக பத்திரிக்கையாளர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.