செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (12:29 IST)

சூரிக்கு கொலை மிரட்டல்: விஷ்ணு விஷால் என்ன செய்தார்?

சூரிக்கு அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
நடிகர் சூரி தன்னிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக இருவர் மீது காவல்துறையினர்களிடம் புகார் அளித்திருந்தார் என்பதும், இதில் ஒருவர் நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார் என்பதையும் பார்த்தோம். இந்நிலையில் நில மோசடி தொடர்பாக புகார் அளித்த நடிகர் சூரியை அக்டோபர் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ரூ.2.7 கோடி ஏமாற்றியதாக கூறப்படும் புகாரில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட சூரிக்கு அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.