திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 அக்டோபர் 2020 (10:57 IST)

மாமியாரை தெருவில் இழுத்துப் போட்டு சாத்தும் மருமகள் –வைரலான வீடியோ!

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே தகராறு எழுந்ததில் சாலையில் நின்று அடித்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது.

ஹைதராபாத்தின் மல்லேபள்ளி பகுதியில் உஜ்மா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் சவுதியில் வேலையில் இருக்கிறார். இதனால் உஜ்மா தனது மாமியார் தனிஷ்காவுடன் வசித்து வருகிறார். ஆனால் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மருமகள் உஜ்மாவின் அம்மா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழ, ஒரு கட்டத்தில் கோபமான உஜ்மா மாமியாரை தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்துள்ளார்.  இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.