இன்றைய போட்டியில் மணிஷ் பாண்டே செய்த சாதனை!
இன்றைய போட்டியில் மணிஷ் பாண்டே செய்த சாதனை!
இன்றைய ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ வழக்கம்போல் களமிறங்கினார்கள்
பெயர்ஸ்டோ 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில் ஐதராபாத் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மனிஷ்பாண்டே அடுத்து களம் இறங்கினார். அவர் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஐபிஎல் போட்டியில் 3000 ரன்கள் எடுத்த சாதனையை புரிந்தார். இதனை அடுத்து மனிஷ் பாண்டே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் சமீபத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் வரை ஐதராபாத் அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது. வார்னர் 40 ரன்களும், மணிஷ் பாண்டே 20 ரன்களும் எடுத்துள்ளனர்.