வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (09:26 IST)

அரைசதத்தில் ஒரு அரைசதம்: டேவிட் வார்னர் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வீரர் 50 அரை சதங்கள் அடித்து சாதனை செய்துள்ளார். அவர்தான் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்
 
நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து அவர் ஐபிஎல் போட்டிகளில் 50 அரை சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
 
டேவிட் வார்னர் அடித்த 50 அரைசதங்களில் 9 பஞ்சாப் அணிக்கு எதிராக அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூர் அணிக்கு எதிராக 7 அரை சதங்களும், சென்னை அணிக்கு எதிராக 5 அரை சதங்களும் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
வார்னரை அடுத்து விராட் கோலி 42 அரை சதங்களும், சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா 39 அரை சதங்களும், டிவில்லியர்ஸ் 38 அரை சதங்களும், தவான் 37 அரை சதங்களும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது