செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By siva
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (07:59 IST)

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 அரை சதங்கள் அடித்த வீரர்: ஆச்சர்ய தகவல்

பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 9 அரை சதங்கள்
நேற்று நடைபெற்ற ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மிக அபாரமாக விளையாடி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து அந்த அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அதே எட்டாவது இடத்தில் உள்ளது 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்த நிலையில் அதில் ஒன்றும் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் அடித்ததுதான். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர்களுடன் 52 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த ஆறு வருடங்களில், டேவிட் வார்னர் தொடர்ச்சியாக 9 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த 9 போட்டிகளில் விளையாடி 58, 81, 59, 52, 70, 51, 70, 81, 52 ரன்கள் அடித்துள்ளார்.
 
தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களை பந்தாடி வரும் டேவிட் வார்னருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது