வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:20 IST)

யப்பா வார்னர் டான்ஸ் ஆடாம களத்துல ஆடுங்க..! – இன்றாவது ரைஸாகுமா சன் ரைஸர்ஸ்?

அரபு அமீரகத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி நாளுக்குநாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆட்டங்களாக ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற செய்யும் ரன் சேஸிங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இந்த சீசனில் வெற்றியை மட்டுமே ருசித்த டெல்லி கேப்பிட்டல்ஸும், தோல்வியை மட்டுமே கண்டு வரும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.

கடந்த இரு ஆட்டங்களிலும் சன் ரைஸர்ஸ் அணி தோல்வியை தழுவியதற்கு ரசிகர்கள் கேப்டன் வார்னரை திட்டி வந்தனர். சில காலம் முன்னர் டிக்டாக்கில் இந்திய பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதை வார்னர் வழக்கமாக கொண்டிருந்தார். அதை வைத்து பலர் அவர் பயிற்சி செய்யாமல் டிக்டாக் செய்வதாக கிண்டல் அடித்து வந்தனர்.

ஆனால் இதுவரை ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸுடன் சன் ரைஸர்ஸ் அணி 15 முறை மோதியுள்ளது. அதில் 9 போட்டிகளில் சன் ரைஸர்ஸ் அணி வென்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே டெல்லி வென்றுள்ளது. எனினும் தற்போது சன் ரைஸர்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் வலுவான பேட்ஸ்மேன்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வார்னர், பேர்ஸ்டோவ், பாண்டே உள்ளிட்டோர் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.

டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அனைத்திலும் நல்ல ஃபார்மில் உள்ளது. எனினும் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால் சன் ரைஸர்ஸ் அணி இந்த போட்டியில் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.