சிரித்தே சிதறடிக்கும் வார்னர்; மல்லுக்கட்டுவாரா ஸ்மித்? - ராஜஸ்தான் vs ஹைதராபாத் மோதல்!
இன்றைய ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் சுற்றின் இறுதி ஆட்டமாக இன்று சன்ரைஸர் அணியுடன் மோத உள்ளது. ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் சிஎஸ்கே அணியை தரவரிசை பட்டியலில் கீழே தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறும்.
அதேபோல இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ள வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து சமநிலையில் உள்ளது. அணியில் வார்னர், பேர்ஸ்டோவ் துவக்க பேட்ஸ்மேன்களாக நல்ல ஃபார்மில் உள்ளனர். ரஷித் கான் விக்கெட்டுகளுக்கு உத்தரவாதமளிக்கிறார்.