புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (17:56 IST)

ஐதராபாத்துக்கு 209 இலக்கு: சாதிப்பாரா வார்னர்?

ஐதராபாத்துக்கு 209 இலக்கு: சாதிப்பாரா வார்னர்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி தற்போது மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த 208 ரன்கள் குவித்துள்ளது. டீகாக் 67 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்துள்ளனர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் இன்று 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
 
இதனை அடுத்து 209 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி தற்போது ஐதராபாத் அணி விளையாடி வருகின்றது. வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர். இந்த இலக்கை ஹைதராபாத் எட்டுமா அல்லது மும்பை இந்தியன்ஸ் அதற்குள் சுருட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்