ஐபிஎல்-2020; தோனியின் முயற்சி பலிக்கவில்லை ! ஐதராபாத் அணி அட்டகாசமான வெற்றி.
ஐபிஎல் போட்டிகள் மற்ற கிரிக்கெட் போட்டிகள் போலில்லாமல் குறைந்த நேரத்தை நிறைய ரன்கள் எடுக்க வேண்டும், விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். முக்கியமாக ஜெயிக்க வேண்டும் என்பதால் இரு அணிகள் மோதினால் பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது 2020 ஐபிஎல் யாரும் கணிக்க முடியாதபடி உள்ளது. இந்நிலையில் இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை கிங்ஸ்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், 3 மாற்றங்களைச் செய்திருந்தார். இதற்கு நல்ல பலன் கொடுத்தது.
எனவே, ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவியில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது , சென்னை கிங்ஸ் அணிக்கு 165 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னை அணி வீரர்கள் அதிக மாற்றமில்லை இருப்பினும் முதலில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழந்துவிட்டாலும், தோனி என்ற பெருந்தூணுடன் ஜடேஜாவும் சேர்ந்து கொண்டு இணைந்து ஆடினர்.
இதில் 13 ஆண்டுகளில் 174 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா இன்றைய T20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்துவிட்டார். இதனால் சென்னை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் திரில்லிங்கான இன்றைய ஆட்டத்தில், சென்னை அணிவீரர்கள் சிறப்பாக விளையாடி ஐதராபாத் நிர்ணயித்த 165 ரன்களை விரட்டிப் பிடித்து வெற்றி பெற முயன்றனர். ஆனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.