வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (06:45 IST)

டெல்லி பேட்ஸ்மேன்கள் சரண்டர்: எளிதில் வெற்றி பெற்ற மும்பை

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்தை தக்க வைத்து கொண்டது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் குவித்த நிலையில் 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை பந்துவீச்சுக்கு சரண்ட்ர் ஆகி, 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
ஸ்கோர் விபரம்:
 
மும்பை அணி: 168/5  20 ஓவர்கள்
 
க்ரிணால் பாண்ட்யா: 37 ரன்கள்
டீகாக்: 35 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 32 ரன்கள்
 
டெல்லி அணி: 128/9  20 ஓவர்கள்
 
தவான்: 35 ரன்கள்
அக்சர் பட்டேல்: 26 ரன்கள்
பிபி ஷா: 20 ரன்கள்
 
ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா
 
இன்றைய போட்டி: கொல்கத்தா மற்றும் பெங்களூர்