டெல்லி அணிக்கு 169 ரன்கள் இலக்கு கொடுத்த மும்பை!

Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (21:52 IST)
இன்று நடைபெற்று வரும் 34வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணி மோதி வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. எனவே டெல்லி அணி வெற்றி பெற 169 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இன்றைய போட்டியில் மும்பை அணியை சேர்ந்த க்ருணால் பாண்ட்யா 37 ரன்களும், டீகாக் 35 ரன்களும், ஹிருத்திக் பாண்ட்யா 32 ரன்களும், ரோஹித் சர்மா 30 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை சேர்ந்த ரபடா 2 விக்கெட்டுக்களையும், மிஸ்ரா, அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது

இன்னும் சில நிமிடங்களில் 169 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங் செய்யவுள்ளது. இரண்டு அணிகளும் 10 புள்ளிகள் பெற்றுள்ளதால் இன்று வெற்றி பெறும் அணி, சென்னையை அடுத்து இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :