தோனி இல்லாததால் தோல்வியா? சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம்

Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (06:22 IST)
நேற்றைய சென்னை மற்றும் ஐதராபாத் இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியில் நேற்று தோனி விளையாடாததும், டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்ததுமே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடியும் அதன்பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்ததும் ஒரு பின்னடவையாக கருதப்படுகிறது

ஸ்கோர் விபரம்:
சென்னை அணி; 132/5
20 ஓவர்கள்

வாட்சன்: 31 ரன்கள்
டூபிளஸ்சிஸ்: 45 ரன்கள்
ராயுடு: 25 ரன்கள்

ஐதராபாத் அணி: 137/4

வார்னர்: 50 ரன்கள்
பெயர்ஸ்டோ: 61 ரன்கள்
ஹூடா: 16 ரன்கள்
ஆட்டநாயகன்: வார்னர்

இன்றைய போட்டி: டெல்லி மற்றும் மும்பை


இதில் மேலும் படிக்கவும் :