டாஸ் வென்று பேட்டிங் எடுத்த மும்பை! டெல்லியை வீழுத்துமா?

Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (20:39 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 34வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்
இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி சற்றுமுன் வரை 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இன்றைய போட்டியில் மும்பை அணியில் டீகாக், ரோஹித்சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, பென் கட்டிங், க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, மலிங்கா ஆகியோர் உள்ளனர். அதேபோல் டெல்லி அணியில் பிரித்தீவ் ஷா, தவான், காலின் முண்ட்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கிறிஸ் மோரீஸ், அக்சார் பட்டேல், கீமோ பால், ரபடா, அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் உள்ளனர்.
டெல்லி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.
அதேபோல் மும்பை அணியும் 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்து 10 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடைத்தில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :