சிஎஸ்கே அணிக்கு முதல் தோல்வி: மும்பை அபார வெற்றி

Last Modified வியாழன், 4 ஏப்ரல் 2019 (06:27 IST)
இந்த ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை சந்தித்தது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடியதால் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. ஆனால் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

சென்னை அணி நேற்றைய தோல்வியால் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டது. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 170/5
20 ஓவர்கள்

சூர்யகுமார் யாதவ்: 59 ரன்கள்
க்ருணால் பாண்ட்யா: 42 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 25 ரன்கள்

சென்னை அணி: 133/8
20 ஓவர்கள்
ஜாதவ்: 58 ரன்கள்
ரெய்னா: 16 ரன்கள்
தோனி: 12 ரன்கள்

ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா

இன்றைய ஆட்டம் டெல்லி மற்றும் ஐதராபாத்


இதில் மேலும் படிக்கவும் :