இன்று சென்னை vs மும்பை – சூப்பர் ஸ்டார்களின் மோதல் !

Last Modified புதன், 3 ஏப்ரல் 2019 (15:52 IST)
ஐபிஎல் போட்டிகளில் சிறந்த அணிகளாக விளங்கு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு தொடங்க இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமானதில் இருந்து சிறப்பான புள்ளி விவரங்களை வைத்திருக்கும் இரு அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் இருந்து வருகின்றனர். இரு அணிகளும் தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளன.

இதில் மும்பை அணி இரண்டு ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவ்விரு அணிகளும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட 26 போட்டிகளில் சென்னை 12 போட்டிகளிலும் மும்பை அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டி நடக்க இருக்கும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 11 போட்டிகளில் 6 போட்டிகளில் மும்பையும் 5 போட்டிகளில் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன.

12 ஆவது சீசனில் முதல் முறையாக இரண்டு அணிகளும் இன்று மோதிக்கொள்கின்றன. இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் சென்னை அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மும்பை அணி மூன்றில் ஒருப் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் இன்றையப் போட்டியில் அனல்பறக்கும் என்பதால் போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :