171 ரன்கள் இலக்கு: 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த சிஎஸ்கே

Last Modified புதன், 3 ஏப்ரல் 2019 (22:16 IST)
இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 15 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய மும்பை அணி, கடைசி ஐந்து ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடி 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்தது. குறிப்பாக 20 வது ஓவரை வீசிய பிராவோ ஓவரில் 29 ரன்கள் அடிக்கப்பட்டது.
ஹிரித்திக் பாண்ட்யா அபாரமாக விளையாடி 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்., சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருணால் பாண்ட்யா 42 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் சாஹர், மோஹித் சர்மா, தாஹிர், ஜடேஜா, பிராவோ தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த நிலையில் 171 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் ஆட்டமிழந்தார். எனவே 1.2 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 6 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :