திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2019 (18:48 IST)

தோனியை பார்த்து கோலி பயந்த காரணம் இதுதான் !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சில தினங்களுக்கு முன்னர் தோனியை புகழ்ந்து பேசினார். அப்போது,’ தான் ஆரம்ப காலத்தில் விளையாடி போது, தோனி என்னை மூன்றாவது வீரராக களமிறக்கினார் ’ புதிய வீரர்களை அப்படி யாரும் இறக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னை அணியுடனான வெற்றிக்கு பின் தோனியின்  ஆட்டம் எனக்கொரு பயத்தை தந்ததாகத் தெரிவித்துள்ளார்.
 
நேற்றைய ஆட்டத்தில் ஆர்பிசி அணி சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணியின் தக்கூர் ரன் அவுட் ஆனதால் பரிதபமாகத் தோற்றது.
 
ஆனால் தோனியின் ஆட்டத்தால் ஆர்பிசியின்  வெற்றி பறிபோகும் நிலையில் இருந்தது. 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார் தோனி.  
 
பின்னர் பேசிய கோலி கூறியதாவது :
 
இப்போட்டி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. போட்டியின் இறுதிவரை சிறப்பாக விளையாடினோம். தோனியின் ஆட்டம் வெற்றியை பறிப்பது போன்று மிகப்பெரிய பயத்தை உண்டக்கியது; இவ்வாறு தெரிவித்தார்.
 
ஐபிஎல்லில் தோனியின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் 84 ரன்கள் ஆகும்.