1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2019
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (21:43 IST)

பெங்களூரை தேற்றிய டிவில்லியர்ஸ்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு!

பெங்களூரை தேற்றிய டிவில்லியர்ஸ்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு!
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட்டை 3வது ஓவரிலேயே இழந்தது. அதனையடுத்து 7வது ஓவரில் பார்த்தீவ் பட்டேல் விக்கெட்டும் போனதால் பெங்களூரு அணி ஆரம்பத்தில் தத்தளித்தது.
 
ஆனால் டிவில்லியர்ஸ் மற்றும் எம்.எம்.அலி ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. குறிப்பாக டிவில்லியர்ஸ் எடுத்த 75 ரன்கள் காரணமாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எம்.அலி 50 ரன்கள் எடுத்தார். மலிங்கா வீசிய கடைசி ஓவரில் பெங்களூர் அணி 3 விக்கெட்டுக்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெங்களூரை தேற்றிய டிவில்லியர்ஸ்: மும்பைக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்யவுள்ளது. ரோஹித் சர்மா, டீகாக், பொல்லார்டு, ஹிருத்திக் பாண்ட்யா என அதிரடி ஆட்டக்காரர்கள் மும்பை அணியில் இருப்பதால் இந்த இலக்கை அவர்கள் எளிதில் அடைய வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் டி20 போட்டியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் கடைசி வரை பொறுத்திருந்து பார்ப்போம்