மும்பை கொடுத்த இலக்கை நெருங்கி வரும் ராஜஸ்தான்: வெற்றி கிடைக்குமா?

Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (18:45 IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் மும்பை கொடுத்த 188 என்ற இலக்கை ராஜஸ்தான் அணி நெருங்கி வருவதால் போட்டி பரபரப்பாக உள்ளது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. டீகாக் அதிரடியாக 52 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 47 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 188 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்றுமுன் வரை 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து  100 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 37 ரன்களில் அவுட் ஆனாலும் பட்லர் மற்றும் சாம்சன் அதிரடியாக விளையாடி வருகின்றனர். 
 
ராஜஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 10 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருப்பதால் போட்டி பரபரப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது


இதில் மேலும் படிக்கவும் :