கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்: மும்பை ஏமாற்றம்

Last Modified சனி, 13 ஏப்ரல் 2019 (19:44 IST)
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் பல போட்டிகள் கடைசி ஓவரிலும், கடைசி பந்திலும் முடிந்து த்ரில்லாகி வரும் நிலையில் இன்றைய போட்டியும்
கடைசி ஓவரில் த்ரில்லுடன் முடிந்துள்ளது

மும்பை அணி கொடுத்த 188 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது. 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் கையில் 7 விக்கெட்டுகளை வைத்திருந்தது

இந்த நிலையில் 18வது ஓவரில் 2 விக்கெட்டுக்களையும், 19வது ஓவரில் ஒரு விக்கெட்டையும் அடுத்தடுத்து ராஜஸ்தான் இழந்ததால் மும்பை அணி வெற்றி பெற ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை நழுவவிட்டதால் 19.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 188 என்ற இலக்கை எட்டியது. இதனால் மும்பை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஸ்கோர் விபரம்:

மும்பை: 187/5

டீகாக்: 81 ரன்கள்
ரோஹித் சர்மா: 47 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 28 ரன்கள்

ராஜஸ்தான்: 188/6

பட்லர்: 89 ரன்கள்
ரஹானே: 37 ரன்கள்
சாம்சன்: 31 ரன்கள்
இந்த வெற்றியால் ராஜஸ்தான் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்த அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறலாம்இதில் மேலும் படிக்கவும் :