தொடர்புடைய செய்திகள்
- எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
- தோல்வி அடைந்த மாணவி மீண்டும் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் உத்தரவு
- மும்பை இந்தியன்ஸும் ப்ளே ஆஃப்புக்கு போகல: ப்ரீத்தி ஜிந்தாவின் அற்ப மகிழ்ச்சி!
- தோனியின் வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடிய மகள்
- பிளே ஆப் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகிறது தெரியுமா?
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை அணி? ஐதராபாத்துடன் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஐதராபாத் (18 புள்ளி), சென்னை (18 புள்ளி), கொல்கத்தா(16 புள்ளி) மற்றும் ராஜஸ்தான் (14 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில், இன்று 7.00 மணிக்கு வான்கடே மைதானாத்தில் நடைபெறவுள்ள பிளே-ஆப் சுற்று தகுதி போட்டியில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும், தோல்வியடைந்த அணி நாளை நடைபெறும் பிளே-ஆப் சுற்று வெளியேற்றுதல் போட்டியில் வெற்றியடைந்த அணியுடன் மீண்டும் மோதும்.
இதுவரை சென்னை அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 6 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐதராபாத் அணி 3 முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறு 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்