பிளே ஆப் சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகிறது தெரியுமா?

Last Modified திங்கள், 21 மே 2018 (08:28 IST)
11வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் லீக் போட்டிகள் முடிந்தன. எட்டு அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இதில் முதல் நான்கு இடத்தை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றில் மோதும் அணிகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம். நாளை அதாவது மே 22ஆம் தேதி முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

அதேபோல் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்த அணீகளான கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மே 23ஆம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஐதராபாத்-சென்னை அணிகள் மோதிய போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோத வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும்
இறுதி போட்டி மும்பையில் வரும் 27ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :