ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய போலீஸ் அதிகாரி

cric
Last Modified செவ்வாய், 22 மே 2018 (07:45 IST)
குஜராத்தில் ஜடேஜாவின் மனைவி ரிவபாவை போலீஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
 
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில், ஜடேஜாவின் மனைவி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் இரு சக்கர வாகனம் மீது தெரியாமல் மோதியுள்ளார்.
 
இதனால் கடும்கோபமடைந்த அந்த கான்ஸ்டபிள் காரிலிருந்த ஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த ஜடேஜாவின் மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
jadeja
இதனையடுத்து ஒரு பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :