தொடர்புடைய செய்திகள்
- IPL விளம்பர மோசடி: ஏர்டெல் மீது ஜியோ புகார்...
- மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான்: சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன்சிங்
- செம! இந்த ஒரே வார்த்தையால் நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் சுசீந்திரன்
- சென்னைக்கு எதிரான போட்டி - பெங்களூர் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்
- சூப்பர் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2018: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா பஞ்சாப் அணி?
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
11-வது ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்க கடினமாக போராடும். அதேபோல் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க கடினமாக போராடும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த கட்டுரையில்