சூப்பர் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (23:57 IST)
 
இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8  விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 68 ரன்களும், டீகாக் 53 ரன்களும் எடுத்தனர்.
 
206 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் தல தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல் ராயுடு 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :