பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான்!

r
Last Modified சனி, 19 மே 2018 (19:33 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
 
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
 
ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ராகுல் திரிபாதி 80 ரன்களும், கேப்டன் ரகானே 33 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 3 வீக்கெட்டுகளை கைப்பற்றினார். 
r
 
பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகப்பட்சமாக டிவில்லியர்ஸ் 53 ரன்கள் எடுத்தார். 


இதில் மேலும் படிக்கவும் :