மீண்டு எழவே வீழ்ந்தோம்: சிஎஸ்கே ட்விட்...

Last Updated: சனி, 19 மே 2018 (12:33 IST)
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
 
தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
சென்னை அணியின் ராயுடு 50 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடியபோதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சென்னை தொல்வி அடைந்தது. டெல்லி அணியின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. 
 
இந்நிலையில், தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர் டிவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று போடப்பட்டுள்ளது. அதில், விரைந்து மீண்டு எழவே வீழ்ந்தோம் என பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவு பின்வருமாறு...


இதில் மேலும் படிக்கவும் :