வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (18:42 IST)

பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டி: ஐதராபாத் பேட்டிங்

ஐபிஎல் பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று  ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஐதராபத் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐதராபாத் அணி 2 வது முறையாகவும், கொல்கத்தா அணி 3 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன. 
 
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 வெற்றிகளுடனும், ஐதராபாத் 5 வெற்றியும் பெற்றுள்ளன.