1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (17:05 IST)

அதிக வெற்றி விகிதத்துடன் கொல்கத்தா: ஹைதரபாத்துடன் இறுதி போட்டிக்கான மோதல்...

ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் சிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், சென்னையுடன் மோதப்போவது யார் என்பது இன்று முடிவாகும். 
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று குவாலிபையர் 2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி 2 வது முறையாகவும், கொல்கத்தா அணி 3 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன. 
 
குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து சிறப்பான பந்துவீச்சு மூலம் சவால் தொடுக்கும் திறமையான அணி ஐதராபாத். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலம். 
 
இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 வெற்றிகளுடனும், ஐதராபாத் 5 வெற்றியும் பெற்றுள்ளன.
 
கொல்கத்தா அணி அதிக வெற்றி விகிதத்தில் இருப்பதால், போட்டியில் யார் வெற்றி பெருவார் என்ற கணிப்பில் சற்று குழப்பமே உள்ளது.