திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (13:23 IST)

லீக் சுற்றோடு வெளியேறியது ஏன்? அஸ்வின் பதில்...

ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. 
 
இந்த தோல்வியால், பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் தகுதியை இழந்தது. இந்நிலையில், தோல்வி குறித்து பஞசாப் அணி கேப்டன் அஸ்வின் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு...
 
நடந்த முடிந்த போட்டியில், எங்களது பேட்டிங் சரியில்லை. பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் கடைசி 7 ஆட்டங்களில் மோசமாக விளையாடினோம். 
 
தொடக்கத்தில் அபாரமாக ஆடினாலும், பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், மிடில் ஆர்டர் சொதப்புவதால் ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. 
 
இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது. அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மன உறுதியும் சீர்குலைந்து போனது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.