திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (04:57 IST)

ஐபிஎல் 2018: முடிந்தது லீக் போட்டிகள், கடைசி போட்டியில் சிஎஸ்கே அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. நேற்று புனேவில் நடந்த கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேகே நாயர் 54 ரன்களும், திவாரி 35 ரன்களும் அடித்தனர்.
 
இந்த நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் ராயுடு, டீபிளஸ்சிஸ், பில்லிங்ஸ் ஆகியோர்களின் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் சுரேஷ் ரெய்னா மற்றும் சாஹார், தோனி ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா 61 ரன்களும், சாஹர் 39 ரன்களும் எடுத்தனர். நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய நிகிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 9 வெற்றிகள் பெற்று 18 புள்ளிகள் எடுத்திருந்தபோதிலும், ரன்ரேட் குறைவாக இருந்ததால் இரண்டாம் இடத்தில் உள்ளது.