153 ரன்களில் சுருண்டது பஞ்சாப்: பிளே ஆஃப் போகுமா?
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 56வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே சென்னை அணியை 101 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பஞ்சாப் அணி தொடக்கத்தில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்துவிட்டாலும், கே.கே.நாயர் 54 ரன்களும், திவாரி 35 ரன்களும் அடித்து ஓரளவு அணியின் ஸ்கோர் உயர உதவி செய்தனர். இருப்பினும், கேப்டன் அஸ்வின் உள்பட அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் பஞ்சாப் அணி 153 ரன்களில் சுருண்டது.
சென்னை அணியை சேர்ந்த நிகிடி 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தாக்கூர், பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களையும், சாஹர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கவுள்ளது.