1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indians Purchase Gold Worth Rs 72,000 Crore During Diwali and Dhanteras Festivals

தீபாவளி பண்டிகைக்கு ரூ.72000 கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்..வரலாறு காணாத விற்பனை...

gold
தீபாவளி மற்றும் தந்தேரஸ் பண்டிகைகளைக் முன்னிட்டு, நாடு முழுவதும் இந்தியர்கள் சுமார் 72,000 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் வாங்கிக் குவித்துள்ளதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை சரிவு மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இந்த ஆண்டு தங்கம் விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
 
அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கு மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் 1.80 லட்சம் ரூபாய் வரை உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது விலை குறைந்து சுமார் 1.42 லட்சமாகச் சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
 
இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி, பண்டிகைக் காலத்தில் மட்டும் இந்தியர்கள் சுமார் 52 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தங்கம் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. வீடுகளில் தங்கத்தை முதலீடாக சேமிப்பதில் இந்தியர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சியாகும். விலை தொடர்ந்து சரிந்து வருவதும், திருமணப் பருவம் தொடங்க இருப்பதாலும் வரும் மாதங்களில் தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...