செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (18:32 IST)

சிஎஸ்கே வெற்றிக்காக பிரார்த்தனையை நிறைவேற்றும் நடிகை வரலட்சுமி..!

சிஎஸ்கே வெற்றி பெற்றால் ஒரு மாதம் அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என பிரார்த்தனை செய்து கொண்ட நடிகை வரலட்சுமி இன்று முதல் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற இருப்பதாக கூறியுள்ளார். 
 
சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி உச்சக்கட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் ஒரு மாதம் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என்றும் அசைவ உணவை சாப்பிட மாட்டேன் என்றும் வரலட்சுமி பிரார்த்தனை செய்து கொண்டார். 
 
அவரது பிரார்த்தனை பலித்து சிஎஸ்கே அணி வென்றது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு அசைவ உணவை சாப்பிட மாட்டேன் என்று நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva