வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (13:43 IST)

சிஎஸ்கே வெற்றிக்கு உதவியவர் பாஜக காரியகர்த்தா தான்: அண்ணாமலை

சிஎஸ்கே வெற்றிக்கு உதவியவர் பாஜகவின் காரியகர்த்தா என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது நெறியாளர் கூறிய போது ’வலுவாக இருக்கக்கூடிய தோற்றம் இருந்தாலும், கடைசி வரை வெற்றி பெறுவார்கள் என்ற தோற்றம் இருந்தாலும், எங்களால் நின்று வெற்றி பெற முடியும், குஜராத்தை வீழ்த்த முடியும் என டிஆர்பி ராஜா கூறியதாக தெரிவித்தார். 
 
அதற்கு பதில் கூறிய அண்ணாமலை ’சிஎஸ்கே டீமில் வின்னிங் ரன் அடித்தது பிஜேபி காரியகர்த்தா ஜடேஜா தான். அவர் ஒரு பாஜக காரியகர்த்தா, அவருடைய மனைவி ஒரு பாஜக எம்எல்ஏ. ஜடேஜா ஒரு குஜராத்தை சேர்ந்தவர். தமிழனாக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தான் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள், அதையும் கொண்டாட வேண்டும். 96 ரன்கள் அடித்தது ஒரு தமிழர், அதையும் கொண்டாட வேண்டும்
 
சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட இல்லை என்றாலும் நாம் சிஎஸ்கே அணியை கொண்டாடுகிறோம் என்றால் அதற்கு காரணம் தோனி ஒருவர்தான். கடைசியில் வின்னிங் அடித்து சிஎஸ்கே அணியை ஜெயிக்க வைத்தது ஒரு காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், அதேதான் தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு நடக்கும் என்று கூறினார்.
 
Edited by Siva