சென்னை வருகிறது ஐபிஎல் வெற்றிக்கோப்பை..!
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ள நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் வெற்றி கோப்பை சென்னைக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிக்கோப்பையுடன் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளம்மிங் கோப்பையை கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியினர் இந்த கோப்பை உடன் சென்னை வருகின்றனர் என்றும் ரசிகர்கள் மத்தியில் இந்த கோப்பை காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் சென்னையில் வெற்றி கோப்பையை வைத்து கொண்டாட சிஎஸ்கே குழுவினர் முடிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva