கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் ஹிட். அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடிப்பார் அஜித். அப்படித்தான் நேர்கொண்டே பார்வைக்கு பின் வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார்..
துணிவு படத்திற்கு பின் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார் ஹெச்.வினோத். ஆனால் ஏனோ அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அடுத்து தனுஷிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கினார் வினோத். ஆனால், தனுஷ் அவரை காக்க வைத்தார்.அந்த இடைவெளியில் விஜய்க்கு ஒரு கதையை சொல்லி ஓகே செய்து அதை ஜனநாயகன் படமாக எடுத்தார். ஆனால், தணிக்கையில் சிக்கியதால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ஹெச்.வினோத்..
அடுத்து தனுஷை வைத்துதான் ஹெச்.வினோத் படம் இயக்குவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் கர படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து தமிழரசன் பச்சையமுத்து இயக்கத்தில் நடிக்கப் போகிறார். எனவே ஹெச்.வினோத் - தனுஷ் இணையும் படம் அடுத்த வருடம் மார்ச் மாதம்தான் தூவங்கும் என்கிறார்கள்.
எனவே அதற்கு இடையில் சும்மா இருக்க முடியாது என்பதால் யோகி பாபுவை வைத்து சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க ஹெச்.வினோத் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.